ஏழு பேர் விடுதலை விவகாரம் வேண்டுமென்றே காலம் தாழ்த்தப்படுவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரன் பரோலில் வந்துள்ளார்.
இவரை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசினார், இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“ஏழு பேரையும் விடுதலை செய்யும் கோரிக்கையை நிராகரிக்காமலும், ஆளுநர் அதில் கையெழுத்திடாமல் காலம் தாழ்த்துவதும் வேண்டுமென்றே திட்டமிட்டு செய்வது போன்று உள்ளது.
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்குசதவிகிதம் உயர்ந்துள்ளது, நோட்டாவுடன் மட்டுமே போட்டிபோட முடியும் என காங்கிரஸ் எம்பி கூறினார்.
எங்களை போன்று தனித்து நின்றால், காங்கிரஸ் குறைவான வாக்குகளே பெறும், இப்போதே சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை தெரிவு செய்துவிட்டோம்.
எங்களுடைய கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம்” என்றார்.