பொதுவாகவே ஆப்பிள் நிறுவனத்தினால் வடிவமைக்கப்படும் ஐபோன்கள் ஏனைய கைப்பேசிகளை விடவும் சைபர் பாதுகாப்பு மிகுந்தவையாகும்.
எனினும் ஆப்பிள் நிறுவனம் இதுவரை அறிமுகம் செய்த ஐபோன்களை விடவும் இவ் வருடம் அறிமுகம் செய்யவுள்ள ஐபோன்களே பாதுகாப்பு அதிகம் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இவ் வருடம் அறிமுகம் செய்யவுள்ள iPhone12 கைப்பேசிகளில் புதிய Face ID தொழில்நுட்பம் மற்றும் 3D கமெரா சென்சார் தொழில்நுட்பம் என்பன உள்ளடக்கப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகின்றது.
இக் கைப்பேசிகள் வழமை போன்று இவ் வருடத்தின் செப்டெம்பர் மாதத்திலேயே அறிமுகம் செய்யப்படவுள்ளன.
எனினும் அதற்கு முன்னராக மார்ச் மாதம் அளவில் iPhone SE2 எனும் கைப்பேசி அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இக் கைப்பேசியானது ஏனைய ஐபோன்களை விடவும் விலை குறைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.