தமிழகத்தில் கடன் தொல்லை காரணமாக தாய், தந்தை மற்றும் புதுமாப்பிள்ளை மூவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசியின் கீழ ஆம்பூர் ரோஸ் கார்டன் பகுதியை சேர்ந்தவர் சந்தானம், பலசரக்குப் பொருட்களை விற்கும் ஏஜென்சி எடுத்து நடத்தி வருகிறார்.
இவரது மனைவி லட்சுமி(ஆசிரியர்), மகன் ஸ்ரீதர்(ஒன்லைன் வர்த்தக பிசினஸ்).
வருகிற 27ம் திகதி ஸ்ரீதருக்கு திருமணம் நடைபெறவிருந்த சூழலில் மூவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
முதல்கட்ட விசாரணையில், ஒன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்ட போது ஸ்ரீதர் பலரிடம் கடன் வாங்கி இருந்ததாகவும், கடனை திருப்பி செலுத்த முடியாத சூழலால் மன உளைச்சலுக்கு ஆளனதும் தெரியவந்தது.
இதனால் ஏற்பட்ட அவமானத்தில் மூவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.