ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி செயலாளர் நாயகமும் கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி இரணைமடு மற்றும் கிலாளி பகுதிகளிற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
கிளிநொச்சி இரணைமடு குளத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இரணைமடு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மீனர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.
அத்துடன், நன்னீர் மீன்பிடியை ஊக்குவிக்கும் முகமாக மீனவர்களுடன் சேர்ந்து இரணைமடு குளத்தில் ஒரு இலட்சம் மீன் குஞ்சுகளை விட்டதுடன் வடக்கு மாகாணத்தில் 40 குளங்களைத் தெரிவுசெய்து நன்னீர் மீன வளர்ப்பை ஊக்குவிக்கப்போவதாகவும் தெரிவித்தார்.
அதேசமயம் கிலாளி பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் கிலாளி பகுதியில் புதிதாக மூன்று மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட கிராமிய மீன்பிடி கட்டடத்தொகுதியை திறந்து வைத்ததுடன் மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்ததுடன் கிலாளிபகுதியில் மண் அகழப்படுவதற்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.