ஈராக்கின் கிர்குக் நகரில் வெடிகுண்டுகளுடன் 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.
ஐஎஸ் தீவிரவாதிகளின் தூண்டுதலின் பேரில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த முயன்ற வேளை குர்து பாதுகாப்பு படையினரால் ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டான்.
தற்போது சிறையில் அடைக்கப்பட்ட Mohammed Ahmed Ismael பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈராக்கில் கால்பந்து விளையாட்டு மைதானத்திற்கு சென்று மக்கள் கூடியிருக்கும் பகுதியில் வெடிகுண்டை வெடிக்கச் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முதலில் மறுத்த சிறுவனை பின்னர் சம்மதிக்க வைத்துள்ளனர்.
முதலில் இதை செய்வதற்கு தனக்கு தைரியமில்லை எனவும், பயமாக இருந்ததாகவும் Mohammed Ahmed Ismael குறிப்பிட்டுள்ளான்.
தற்போது கிரிமினல் வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், இதற்கு பின்னரும் தன்னுடைய நிலை என்னவாகும் என தனக்கு தெரியாது எனவும் தெரிவித்துள்ளான்.
வடக்கு ஈராக் பகுதியில் பல சிறுவர்களுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் பயிற்சி அளித்ததாகவும், புனிதப் போர் பற்றி கற்றுக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளான்.