முதல்வர் ஜெயலலிதா மறைந்துவிட்டதாக முதலில் வெளியான தகவலை அடுத்து தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுவிட்டன.
முதல்வர் ஜெயலலிதா மறைந்துவிட்டதாக வெளியான தகவலை அடுத்து சென்னையில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. பரபரப்பாக காணப்படும் சென்னையின் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி சென்னையில் அனைத்து கடைகளும், பெட்ரோல் பங்குகளூம் மூடப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளதாகவும் ஆங்காங்கே சிறு சலசலப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது தமிழகம் முழுக்க பலருக்கு மொபைல் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வீண் அசம்பாவிதங்களைத் தவிர்க்க, மொபைல் சேவை முடக்கப்பட்டு இருக்கலாம் என செய்திகள் வெளியாகின்றன.
மேலும் கடைகளை மூடச் சொல்லி வாய்மொழியாக கட்சியினரும் காவல்துறையினரும் அறிவுறுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதனிடையே அப்பல்லோ மருத்துவமனை முன்பு திரளான அதிமுக தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர், பாதுகாப்பு கருதி ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.