யூத இனப்படுகொலையை நினைவுகூரும் ஒரு நிகழ்ச்சி ஒன்றிற்காக எருசலேம் சென்றிருந்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், கோபத்தில் ’வெளியே போங்கள்’ என கத்தும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
எருசலேமிலுள்ள புனித ஆன் தேவாலயம் என்னும் தேவாலயத்துக்கு சென்றிருந்தார் மேக்ரான்.
அந்த இடம் பிரான்சில் பொறுப்பில் உள்ளதால், அதற்கு பாதுகாப்பளிக்க வேண்டியது பிரான்ஸ் பொலிசாரின் பொறுப்பு.
ஆனால், இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்குள் நுழைய முயன்றுள்ளார்கள். அதனால் இரு நாட்டு பொலிசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
உடனே பிரச்சினையில் தலையிட்ட மேக்ரான், இஸ்ரேல் பொலிசாரில் ஒருவரைப் பார்த்து, நீங்கள் என் முன்னால் நடந்துகொண்ட விதம் எனக்கு பிடிக்கவில்லை, தயவு செய்து வெளியே போங்கள் என்று சத்தமிட்டார்.
பின்னர் சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்ட அவர், நம் எல்லோருக்கும் விதிமுறைகள் தெரியும், யாரையும் யாரும் தூண்டவேண்டாம், அமைதியாக இருப்போம் என்றார்.
பின்னர் சீருடையில் இல்லாத ஒரு பொலிசாரைப் பார்த்து, நாங்கள் நகருக்குள் நடந்து வரும்போது நீங்கள் எங்களுக்கு நல்ல முறையில் பாதுகாப்பளித்தீர்கள், உங்களைப் பாராட்டுகிறேன் என்றார்.
Coup de colère de #Macron contre la police israélienne à Jérusalem. Dans les pas de Chirac en 1996 pic.twitter.com/DKP5ICThTK
— Ava Djamshidi (@AvaDjamshidi) January 22, 2020
தயவு செய்து பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்படும் விதிமுறைகளைப் பின்பற்றுங்கள், அவை என்னால் மாறப்போவதில்லை, சரியா? என்றார் அவர்.
நிகழ்ச்சிக்குப் பின் மேக்ரான் தங்களிடம் மன்னிப்புக் கேட்டதாக இஸ்ரேல் பொலிசார் தெரிவித்ததாக செய்திகள் வெளியாக, பிரான்ஸ் ஜனாதிபதி மன்னிப்புக் கேட்கவில்லை என பிரான்ஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.