சுவிட்சர்லாந்தின் பாஸல் மண்டலத்தில் குடும்ப தகராறு காரணமாக பச்சிளம் குழந்தையை இளம் பெற்றோர் கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் பாஸல் குற்றவியல் நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டுள்ளது.
பாஸல் மண்டலத்தில் குடியிருக்கும் 26 வயதான தாயாருக்கு கடந்த 2015 செப்டம்பர் மாதம் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
குடும்ப நல நீதிமன்றத்தின் அறிவுத்தலின்படி மருத்துவமனையில் இருந்து நேரடியாக தாய் சேல நல இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இல்லத்தில் ஊழியர்கள் மற்றும் உரிய பொறுப்பாளர்கள் குறித்த குழந்தையை பராமரித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் அந்த பச்சிளம் குழந்தை மீது ஐந்து முறை கொடூர தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மூன்று மாதங்களில் அவர்கள் குழந்தையின் தொடை மற்றும் தாடைகளை உடைத்துள்ளனர், அதே போல் இரண்டு முழங்காலையும் பல முறை காயப்படுத்தியுள்ளனர்.
ஒரு கட்டத்தில் மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்துச் சென்ற நிலையிலேயே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மட்டுமின்றி, மருத்துவமனையில் குழந்தையை தனியாக விட்டுவிட்டு அந்த தாயார் மாயமாகியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதியப்பட்டு, விசாரணை முன்னெடுத்த அரசு தரப்பு வழங்கறிஞர்கள்,
அந்த தாயார் மட்டுமின்றி, தந்தையும் இந்த கொடூரத்தை முன்னெடுக்க துணை போயிருக்கலாம் என குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இதனையடுத்து இருவருக்கும் தலா 10 மாதங்கள் சிறை தண்டனை விதிக்க பாஸல் குற்றவியல் நீதிமன்றத்தை கேட்டுகொண்டுள்ளனர்.