தன்னை கடத்திச் சென்றதாக தெரிவித்த சுவிஸ் தூதரக பெண் ஊழியர் தொடர்பில் மேலும் சில புதிய தகவல்கள் வெளிவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி இந்த விசாரணையை முன்னெடுத்துவரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் பெறப்பட்ட புதிய தகவல்களை நீதிமன்றுக்கு சமர்ப்பித்துள்ளனர்.
வெளிவந்த புதிய தகவலின்படி
கடத்திச் செல்லப்பட்ட பெண் உத்தியோகத்தரின் வாயில் கைத்துப்பாக்கி ஒன்று வைக்கப்பட்டு மிரட்டியதன் ஊடாக அச்சமடைந்து, பேசமுடியாமல் இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தகவலொன்றை வெளியிட்டிருந்தார்.
ஆனால் இந்த காலப்பகுதியில்தான் அந்த பெண் ஊழியர் பலருடனும் தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்டதாக குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த உரையாடல் தொடர்பான ஆதாரங்களையே நீதிமன்றத்தில் அவர்கள் சமர்ப்பித்துள்ளனர்.