திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முச்சக்கர வண்டியொன்றும்,மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவம் நேற்றிரவு(24) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் வாத்தியாகம சந்தியில் இடம்பெற்ற இவ்விபத்தில் கந்தளாய் பகுதியியைச் சேர்ந்த நிலந்த குமார, சோமபால, நிரோசன் என ஐவரே இவ்வாறு படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் நகரிலிருந்து வாத்தியாகம பகுதிக்குச் சென்ற முச்சக்கர வண்டியும்,கந்தளாய் பிரதான வீதிக்கு சென்ற மோட்டார் சைக்கிளுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதிக வேகமாக சென்றதையடுத்தே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.