திருகோணமலை மாவட்டத்திலுள்ள கந்தளாய் குளத்தின் குளக்கட்டின் அடிப்பாகத்தில் நீர்க் கசிவு ஏற்பட்டதையடுத்து கந்தளாய் குளக்கட்டினை புனரமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தற்போது கந்தளாய் குளத்தில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளதோடு மேலதிக நீரும் வெளியேற்றப்பட்டு வருகின்றது.
குளக்கட்டின் நீர்க் கசிவு ஏற்பட்ட பகுதியில் ஆழமாக தோண்டி மண் இட்டு கொங்கிரீட் இடப்படுகிறது.அத்தோடு நீர் வழிந்தோடுவதற்கான கான்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
நீர்ப்பாசன திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இவ்வேலைகளை பொறியியலாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.
திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள கந்தளாய் குளமானது இரண்டாம் அக்போ மன்னனால் கட்டப்பட்ட புராதன குளங்களில் ஒன்றாக கணிப்பிடப்படுகின்றது.
அண்மையில் பெய்த கடும் மழையினால் கந்தளாய் குளத்தின் ஐந்து வான் கதவுகள் ஒரு அடிக்கு திறந்து விடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.