பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்யவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் கோரிக்கைவிடுத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்தகோரிக்கையை விடுத்துள்ளார்.
மேலும்,பௌத்த பிக்குகள் என்ற ஒரே காரணத்திற்காகவே இவர்களின் இந்த அடவாடிசெயற்பாடுகளை பொலிஸார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர் என நாடாளுமன்றஉறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்க சட்டத்தின் நம்பகத்தன்மை நாளுக்கு நாள் நலிவடைந்து வருவதையேஇது எடுத்துக்காட்டுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே இனமுறுகலை ஏற்படுத்தும் வகையிலானசெயற்பாடுகளை ஞானசார மேற்கொண்டு வருகிறார்.
அண்மையில் மட்டக்களப்பிலும் அவர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்தார்.
இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட வேண்டும் என்று முஜிபுர் ரஹ்மான்வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.