பிரான்சில், வெள்ளையினச் சிறுவன் ஒருவனை, எட்டு கருப்பினச் சிறுவர்கள் சூழ்ந்துகொண்டு தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சின் Etampes என்ற பகுதியில் எட்டு கருப்பினச் சிறுவர்கள் சேர்ந்து, ஒரு வெள்ளையினச் சிறுவனை மிதிக்க, ஒரு பெண் அவர்களை உற்சாகப்படுத்தியவாறே சத்தமாக சிரித்தபடி அதை வீடியோ எடுக்கிறாள்.
கதறியழும் அந்த சிறுவன் மீது சற்றும் இரக்கமில்லாமல் ஒரு கருப்பினச் சிறுவன் வேண்டுமென்றே விழ, வலியில் கதறித்துடிக்கிறான் அவன். மற்ற சிறுவர்கள் அதைப் பார்த்து சிரிக்கின்றனர்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதையடுத்து பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளனர்.
அதே நேரத்தில் இது வேண்டுமென்றே அரங்கேற்றப்பட்ட ஒரு நாடகமாகவும் இருக்கலாம் என்று பொலிஸ் செய்திதொடர்பாளர் ஒருவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
2005ஆம் ஆண்டு பிரித்தானியாவில் ‘Happy Slapping’ என்றொரு விடயம் தொடங்கி வைக்கப்பட்டதாம்.
அதாவது, பொழுதுபோகாமல் போர் அடிக்கும்போது, இளைஞர்கள் இதுபோல் ஒருவரையொருவர் முரட்டுத்தனமாக தாக்கிக்கொள்வார்களாம்.
வீடியோ எடுக்கப்பட்டு ஒன்லைனில் பிரபலமாவதற்காக அவர்கள் இப்படி செய்வதுண்டாம்.