சர்வதேச அளவில் தேடப்பட்டு வந்த பாலியல் குற்றவாளி, 17 வருடங்களுக்கு பின் அமெரிக்க விமான நிலையத்தில் திங்கட்கிழமையன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பார்த்தசார்த்தி கபூர் (47), கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்று வசித்து வந்தவர். இவர் 1998 மற்றும் 2003 க்கு இடைப்பட்ட காலத்தில் 7 முதல் 14 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுவர்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்க Montréal பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்றதாக குற்றம் சாட்டப்பட்டார்.
2003 ஆம் ஆண்டில், அவர் ஒரு பொலிஸ் விசாரணைக்கு உட்பட்டவர் என்பதை அறிந்ததும், கனடாவில் இருந்து தப்பி ஓட்டம் பிடித்தார். பல வருடங்களை கடந்த நிலையிலும் அவரை பிடிக்க முடியாத நிலையில், சர்வதேச அளவில் தேடப்படும் நபராக கனடா பொலிஸார் அறிவிப்பு வெளியிட்டனர்.
இந்த நிலையில் 17 வருடங்களுக்கு பின், நியூ ஜெர்சியில் உள்ள நெவார்க்-லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்தில் திங்கட்கிழமையன்று பொலிஸார் அவரை கைது செய்தனர்.
கபூர் கைது செய்யப்பட்டபோது தனது சொந்த நாடான இந்தியாவுக்கு விமானத்தில் ஏற முயன்றதாக பொலிஸார் கூறுகின்றனர். ஒப்படைப்பு நடவடிக்கைகள் நிலுவையில் உள்ள நிலையில் அவர் அமெரிக்க காவலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.