இந்தியாவின் சண்டிகரை சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக சந்தேகத்தினால் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் ஏற்கனவே பரவிவிட்டது.
இந்நிலையில், சீனாவில் இருந்து இந்தியா வரும் அனைவரும் சுகாதாரத்துறை சார்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அதில், சண்டிகரை சேர்ந்த நபர் ஒருவர் கொரோனா தாக்குதல் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில் “சீனாவில் இருந்து திரும்பிய நபருக்கு சளி காய்ச்சல், உள்ளது. அவரை தனி வார்டில் வைத்து கவனித்து வருகிறோம். அவரது இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளனர்.
முன்னதாக இந்தியாவின் முக்கிய நகரங்களிலும், சீனாவில் இருந்து வரும் பயணிகளிடமும் இந்த நோயின் தாக்கம் உள்ளதா என்று சுகாதாரத்துறை ஆய்வு செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.