கொரோனா வைரஸ் பிரித்தானியாவிற்கும் பரவியுள்ளது என்ற அச்சத்தின் மத்தியில், பர்மிங்காமில் ஆம்புலன்சின் பின்புறத்தில் hazmat-clad உடையணிந்த துணை மருத்துவர்கள் ஒரு நோயாளியை ஏற்றும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
கடுமையான சுவாச நோய்த்தொற்றை ஏற்படுத்தக்கூடிய கொடிய கொரோனா வைரஸ் தற்போதுவரை சீனாவில் 101 உயிர்களை பலிகொண்டுள்ளது. மேலும், 4,500 க்கும் மேற்பட்டவர்களை பாதித்துள்ளது.
அதேசமயத்தில் இந்த வைரஸ் தொற்றானது ஒவ்வொரு நாடுகளுக்கு சிறிது சிறிதாக பரவிக்கொண்டே செல்கிறது. அதிகாரிகளும் மருத்துவர்களும் இதனை கட்டுப்படுத்துவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜேர்மனியில் வைரஸ் தோற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், பிரித்தானியாவிற்கும் பரவியுள்ளதா என்கிற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.
இந்த நிலையில் பர்மிங்காமின் ஹார்போர்னில் உள்ள ஒரு வீட்டிலிருந்து முகமூடி அணிந்த ஒருவர் ஆம்புலன்சில் பின் பகுதியில் ஏற்றப்பட்டுள்ளார்.
பக்கத்து வீட்டு நபர் பதிவு செய்திருக்கும் அந்த வீடியோவில், நோயாளியை தொடர்ந்து ஏறும் துணை மருத்துவர் ஒரு வெள்ளை ஹஸ்மத் சூட், நீல நிற கவசம், கையுறைகள் மற்றும் ஒரு விசர் கொண்ட முகமூடி உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்களுடன் காணப்படுகிறார்.
நேற்று பிற்பகல் முதல் 125,000 தடவைகளுக்கு மேல் பார்க்கப்பட்ட இந்த வீடியோ காட்சியானது தற்போது பிரித்தானியாவில், கொரோனா வைரஸ் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
what have i just witnessed outside my flat?? in harborne ? #coronavirus pic.twitter.com/P0tnLsqHLQ
— moll? (@MollieLuneBCFC) January 27, 2020