பிரித்தானியாவில் பிறந்து அவுஸ்திரேலியாவுக்கு தத்துக் கொடுக்கப்பட்ட ஒருவர், தான் பிரித்தானிய இளவரசர் சார்லசுக்கும் கமீலாவுக்கும் பிறந்த மகன் என்று கூறி நீதிமன்றம் செல்ல உள்ளார்.
Simon Dorante-Day (53) அவுஸ்திரேலியாவில் குடியமர்ந்துள்ள பிரித்தானிய பொறியாளர்.
தான் உண்மையில் பிரித்தானிய இளவரசர் சார்லசுக்கும் அவரது காதலியாக இருந்து பின்னர் மனைவியான கமீலாவுக்கும் பிறந்த மகன் என்று கூறி, அதை நிரூபிக்க DNA சோதனைக்கு அவர்கள் இருவருக்கும் உத்தரவிடுமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறார்.
தன்னை தத்தெடுத்த Winifred, Ernest தம்பதியர் பிரித்தானிய மகாராணியாருக்காக சமையல் மற்றும் தோட்ட வேலை செய்ததாகவும், அவர்கள் பல முறை தன்னிடம், தான் இளவரசர் சார்லசுக்கும் அவரது காதலி கமீலாவுக்கும் பிறந்தவன் என்று கூறியுள்ளதாகவும் தெரிவிக்கிறார் Simon.
Simon ஹாம்ப்ஷையரிலுள்ள Gosportஇல் 1966ஆம் ஆண்டு பிறந்தவர். அவர் 18 மாதக் குழந்தையாக இருக்கும்போது Winifred, Ernest தம்பதியர் அவரை தத்தெடுத்தார்களாம்.
அவரது கூற்றுப்படி, 1965ஆம் ஆண்டு, சார்லசுக்கு 17 வயதும், கமீலாவுக்கு 18 வயதும் இருக்கும்போது அவர் கருவில் உருவாகியிருக்க வேண்டும்.
தனது கன்ன எலும்பு மற்றும் பல் ஆகியவை சார்லசைப் போலவும், தலைமுடி கமீலாவைப்போலவும் இருப்பதாக தெரிவிக்கும் Simon, தன்னை இளவரசர் Simon என்றே அழைத்துக்கொள்கிறார்.
இதெல்லாம் மகாராணியாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தெரிந்திருக்கும் என்றும், அதை மறைக்கத்தான் Sandringhamஇல் விவாதித்து மேகன் விடயத்தை வெளியிட்டதாகவும் தெரிவிக்கிறார் Simon.
அவரது கண்கள், சார்லஸ் கமீலா கண்களைப்போல் இல்லாமல் பிரௌன் நிறத்தில் இருப்பதைக் குறித்து விமர்சகர் ஒருவர் அவரிடம் நேரடியாகவே கேள்வி எழுப்பினார்.
அதற்கு Simon அளித்த பதில் என்ன தெரியுமா? பார்த்தீர்களா? ஏற்கனவே இந்த விடயம் எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது, அதனால்தான் அதை மறைப்பதற்காக எனது கண்களைப்பற்றி பேசுகிறார்கள் என்கிறார் Simon.