நீதிமன்றத்தை சுதந்திரமாக மாற்றுவதற்கு 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை திருத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
காலியில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,
நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என நாட்டு மக்கள் நம்புகின்றனர். குரல் பதிவுகளில் வெளியாகியுள்ள விடயங்களுக்கு அமைய நீதிமன்றம், பொலிஸ் மற்றும் அரசத்துறை ஆகியவற்றை சுதந்திரமாக மாற்ற வேண்டும் என்று கருத்து வெளியாகியுள்ளது.
நீதித்துறை மற்றும் பொலிஸ் துறையில் அரசியல் தலையீடுகள் இருக்கும் விதம் தெரியவந்தது. அரசத்துறைக்கு இருந்த அழுத்தங்கள் தொடர்பாக அறிந்து கொள்ள முடிந்துள்ளது.
இப்படியானவர்கள் அரச துறை மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் சுதந்திரத்தை அழித்துள்ளனர். புதிய அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும் எனவும் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.