கொரோனா வைரஸ் தாக்கத்தை அவசர நிலைமையாகக் கருதி செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் அறிக்கை ஒன்றினூடாக அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் உலகளாவிய ரீதியில் மக்களை பீதியடை செய்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிக்கையூடாக குறிப்பிட்டுள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனம், அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மத்திய நிலையத்துடன் இணைந்து இதற்கான தீர்வைக் காண இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் நாட்டில் அடையாளங்காணப்பட்டதன் பின்னர் இங்கும் அவதான நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இந்த வைரஸ் தாக்கம் தொடர்பில் கலந்துரையாட பாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.