சீனாவின் வுஹான் நகரில் இருந்து வந்த நபரை அரசு அதிகாரிகள் கட்டாயப்படுத்தி வீட்டுக்குள் அடைத்து வைக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
உலகை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் முதலில் சீனாவின் வுஹான் நகரத்தில் தான் தோன்றியது.
இந்த வைரஸ் தாக்குதலால் சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்ந சூழலில் சீனாவின் வுஹான் நகரில் இருந்து வேறு இடத்துக்கு வந்த நபர் சித்திரவதைக்கு உள்ளாகும் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.
அதில், அந்த நபர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என நினைக்கும் அதிகாரிகள் அவரை வலுக்கட்டாயமாக வீட்டுக்குள் அடைத்து தனிமைப்படுத்துகிறார்கள்.
அதன்படி வீட்டிலிருந்து அந்த நபர் வெளியில் வராதபடி கதவுகளை பூட்டுவதோடு, ஆணிகள் அடித்து அடைக்கிறார்கள்.
இதோடு அந்த வீட்டில் உள்ளவர்களுடன் யாரும் தொடர்பு வைத்து கொள்ளாதீர்கள் என நோட்டீஸும் வீட்டு வாசலில் ஒட்டுகிறார்கள்.
இந்த வீடியோவை பார்க்கும் பலரும் இப்படி மனித தன்மையில்லாமல் அதிகாரிகள் நடந்து கொள்வது பெரும் தவறு என கருத்து கூறியுள்ளனர்.
#UPDATE: This video is pretty hard to watch but it reportedly shows government officials forcefully locking in an individual who had just returned from #Wuhan, #China to another city in the #PRC. Take that into consideration, forceful lock-in. – Jon #coronavirus #CoronaOutbreak pic.twitter.com/CVvPPyAN7u
— World Events Live (@IdeologyWars) January 29, 2020