அவுஸ்திரேலிய அரசின் கடுமையான கட்டுப்பாட்டால் அங்கு குடியுரிமைக்கு விண்ணப்பவர்களின் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை குடியுரிமைத் தொடர்பான புள்ளிவிபரம் விவரிக்கிறது.
கடந்த 2018-2019 நிதியாண்டில் அவுஸ்திரேலிய குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ள குடியேறிகளின் எண்ணிக்கை 138,387 ஆகும். அதுவே, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 42 சதவீதம் வீழ்ச்சியடைந்து காணப்படுகின்றது.
கடந்த 2017- 2018 நிதியாண்டில் 239,413 குடியேறிகள் குடியுரிமைக் கோரி விண்ணப்பித்திருக்கின்றனர். இதுவே, கடந்த 5 ஆண்டுகளில் அதிகபட்ச எண்ணிக்கையை இருக்கின்றது.
இந்த நிதியாண்டை பொறுத்தமட்டில், கடந்த 4 மாதங்களில் 48,255 பேர் குடியுரிமைக் கோரி விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பம் தொடர்பான முடிவுக்கு இரண்டாண்டுகள் காத்திருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார் அவுஸ்திரேலிய இடப்பெயர்வு கவுன்சலின் கர்லா வில்ஷிரீ.
கடந்த ஜூலை மாதம், அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிப்பதற்கான விசா எண்ணிக்கை 1 லட்சத்து 90 ஆயிரமாக இருந்த நிலையில், 1 லட்சத்து 60 ஆயிரமாக அவுஸ்திரேலிய அரசு குறைத்துள்ளது.