பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாள் விஜயமாக பெப்ரவரி 7ஆம் திகதி இந்தியாவுக்கு பயணமாகவுள்ளார்.
இதன் போது அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்துவார்.
ராஜபக்ஷ பெப்ரவரி 7 ஆம்திகதி இலங்கை தூதுக்குழுவுடன் இந்தியா வுக்கு சென்று பெப்ரவரி 8 ஆம் திகதி பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பார்.
“அவரது இந்த விஜயம் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உயர்மட்ட பரிமாற்றங்களின் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகும்” என்று இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் நேற்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
டெல்லியில் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையை தவிர, மஹிந்த ராஜபக்ஷ வாரணாசி, சாரநாத், புத்த கயா மற்றும் திருப்பதி ஆகிய இடங்களுக்கும் பயணிப்பார் என்று குமார் தெரிவித்தார்.
இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளை நிறைவேற்றுவது, இந்தியப் பெருங்கடல் நிலைமை மற்றும் பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகளை அதிகரிப்பதற்கான வழிகள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் மோடிக்கும் இலங்கை பிரதமருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.