இலங்கையில் சீதைக்கு கோவில் கட்ட காங்கிரஸ் தலைமையிலான மத்திய பிரதேஷ் அரசு நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளது.
இலங்கையில் சீதை கோவில் நிர்மாணம் தொடர்பில மத்திய பிரதேஷ் முதல்வர் கமல்நாத் தலைமையில் அண்மையில் கூட்டமொன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் இலங்கை மகாபோதி சங்கத்தின் தலைவர் பானகல உபதிஸ்ஸ தேரரும் கலந்துகொண்டிருந்தார்.
இதனையடுத்து, இலங்கையில் சீதைக்கு கோவில் கட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கோவிலின் மாதிரி வரைபடம், நிதி உள்ளிட்ட விபரங்களை உடனடியாக தயாரித்து வழங்குமாறு உரிய தரப்பினருக்கு முதல்வர் கமல்நாத் உத்தரவிட்டுள்ளதாகவும் இந்திய தகவல்கள் குறிப்பிடுகின்றன.
தேவைப்படும் நிதியை இந்த நிதியாண்டிலேயே ஒதுக்குவதற்கும் முதல்வர் கமல்நாத் உத்தரவிட்டுள்ளார்.
இந்த கோவிலின் நிர்மாணப்பணிகளை மத்திய பிரதேச அரசு, இலங்கை அரசு மற்றும் மகாபோதி சங்கத்தினர் இணைந்து மேற்கொள்ளவுள்ளதாகவும் இந்திய தகவல்கள் குறிப்பிடுகின்றன.