இந்தோனேசியாவில் முதலையின் கழுத்தில் சிக்கியுள்ள டயரை அகற்றுபவருக்கு சன்மானம் வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
மத்திய சுலவேசியில் உள்ள பாலு ஆற்றில் முதன்முதலில் காணப்பட்ட இந்த உயிரினம் குறைந்தபட்சம் 2016 முதல் டயருடன் போராடுவதாக தெரியவந்துள்ளது.
ஆபத்தான இந்த சியாமி முதலையானது 2018 ஆம் ஆண்டில் இப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் தப்பியிருக்கிறது,
ஆனால் கழுத்தில் சிக்கிய டயரில் இருந்து அதனால் விடுதலை பெற முடியவில்லை.
பல நாட்களாக முதலையின் கழுத்தை சுற்றியிருக்கும் அந்த டயர் நாளடைவில் முதலையின் கழுத்தை இறுக்கி இறப்பை ஏற்படுத்தலாம் என அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அந்த ராட்சத முதலையின் கழுத்தில் சிக்கியுள்ள டயரை அகற்றுபவருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ஊர்வன இன விலங்குகளை வேட்டையாடும் வீரர்களை அழைக்கவில்லை.
வனவிலங்கு மீட்பில் அனுபவம் உள்ளவர்களையும், அவற்றின் பாதுகாப்பில் வேட்கை உள்ளவர்களையே அழைக்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.