கற்பிட்டி-பள்ளிவாசல்துறை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்த வயோதிபப் பொண்ணொருவர் ௯ரிய ஆயுதம் ஒன்றினால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கற்பிட்டி சம்மட்டிவாடி, பள்ளிவாசல்துறை பகுதியைச் சேர்ந்த 83 வயதுடைய தேவான அம்மா என்ற வயோதிபப் பெண் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர்.
புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் சம்சுல் ராபி சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை நடத்தியதுடன், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், உயிரிழந்த வயோதிபப் பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இக்கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்துள்ளதாக கற்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்ததுடன், கொலை செய்தமைக்கான காரணம் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.