Loading...
சாவகச்சேரியில் இளைஞர் ஒருவரை மோதித் தள்ளிவிட்டு, கார் ஒன்று தப்பிச் சென்றுள்ளது.
சங்கத்தானையில் நேற்று மாலை இந்த விபத்து நடந்தது. மதுபோதையில் காரை செலுத்தி வந்த ஒருவர், வைத்தியசாலை கடமைகளை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரை மோதித் தள்ளியது.
இதில் மோட்டார் சைக்கிள் முற்றாக சேதமடைந்ததுடன், அதை செலுத்தி வந்த வைத்தியசாலை உத்தியோகத்தரான இளம் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் தற்போது, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Loading...
அவரை மோதித்தள்ளிய கார் தப்பியோடி தலைமறைவாகியுள்ளது.
தலைமறைவான கார் சாரதியை பொலிசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Loading...