அரசியல் வாழ்வின் முன்னரே திரையுலகத்தில் மாபெரும் நட்சத்திரமாக திகழ்ந்தவர் ஜெயலலிதா. இதனால் பெரும் சொத்துக்களும் அவருக்கு உள்ளதாக தகவல்.
இந்நிலையில் தற்போது அவர் காலமாகியுள்ளதைத் தொடர்ந்து அச்சொத்துக்கள் தொடர்பில் பரவலாக விவாதிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வருடம் அவர் பிரகடனப்படுத்திய சொத்து விபரங்களின் அடிப்படையில் அதன் மொத்த பெறுமதி 113.74 கோடி ரூபாவாகும்.
தேர்தலில் போட்டியிடும் பொருட்டு அவர் இதனை பிரகடனப்படுத்தியிருந்தார். இதில் அசையும் சொத்துக்கள் 41.63 கோடி ரூபா மற்றும் அசையா சொத்துக்கள் 72.09 கோடி ரூபாவாகும்.
இதன்போது கையில் 42 ஆயிரம் ரூபா இருப்பதாகவும், பொறுப்பாக 2.04 கோடி ரூபா இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்துள்ளார்.
மேலும் தன்னிடம் 21,280.300 கிராம் தங்கம் உள்ளதாகவும், ஆனால் அது சொத்துக்குவிப்பு வழக்கு விவகாரம் காரணமாக கர்நாடக அரச திறைசேரியில் இருப்பதால் அதன் பெறுமதியை கணிக்க முடியவில்லை எனவும் அவர் தனது பிரகடனத்தில் குறிப்பிட்டிருந்துள்ளார்.
இதுதவிர தன்னிடம் 1,250 கிலோ கிராம் வெள்ளி உள்ளதாகவும் அதன் பெறுமதி 3,12,50,000 ரூபா எனவும் அவர் குறிப்பிட்டிருந்துள்ளார்.
பல்வேறு நிறுவன ங்களிலும் ஜெயா முதலீடுகளை மேற்கொண்டிருந்துள்ளார். அம் முதலீடுகளின் மொத்தப் பெறுமதி 27.44 கோடி ரூபா என அவர் குறிப்பிட்டிருந்துள்ளார்.
ஜெயாவின் போயஸ்கார்டன் வேத நிலையம் இல்லம் 49.96 கோடி ரூபா. இது அவர் 1967 ஆம் ஆண்டு தனது தாயுடன் சேர்ந்து 1.32 இலட்சம் ரூபாவுக்கு வாங்கியதாம்.
மேலும் தெலுங்கானாவில் , ரங்கா ரெட்டி மாவட்ட த்தில் அமைந்துள்ள 14.50 ஏக்கர் நிலம் , காஞ்சிபுரம் செய்யூரில் 3.43 ஏக்கர் நிலம் மற்றும் சென்னை , ஐதராபாத் நகரங்களில் அமைந்துள்ள கட்டிடங்கள் ஆகியனவும் சொத்துகளுக்கும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவற்றுக்கு மேலதிகமாக டொயோட்டா பிராடோ எஸ்.யு,வி இரண்டு பெறுமதி 40 இலட்சம். மேலும் சில வாகனங்கள் உட்பட இவற்றின் பெறுமதி 42,25,000 ரூபா. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரிலுள்ள சொத்துக்கள் யார் யாருக்கு செல்லும் என்பது குறித்து, இந்திய ஆங்கில செய்தி ஊடகம் ஒன்று பரபரப்பு டிவிட்டை வெளியிட்டுள்ளது.
ஜெயலலிதாவின் கொடநாடு சொத்து சசிகலா நடராஜனுக்கும், போயஸ் கார்டன் இல்லம், இளவரசியின் மகன் விவேக் கிற்கும் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.