திருகோணமலையில் உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அபயபுர பிரதேசத்தில் நெடுங்காலமாக இயங்கி வந்த விபச்சார நிலையம் நேற்று (02) மாலை திருகோணமலை மாவட்ட பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டது.
இச்சுற்றிவளைப்பின் போது விபச்சார நிலையத்தை நடத்தி வந்த திருகோணமலை உவர்மலை பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதான ஆணும், வவுனியா மாவட்டம் பூந்தோட்டம் பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதான விபச்சார அழகியும் கைது செய்யப்பட்டதாக பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு தலைமையக பொலிஸார் வசம் ஒப்படைத்தாக அவர்கள் தெரிவித்தனர்.
திருகோணமலை மாவட்டத்தில் இவ்வருடம் மாத்திரம் இதுவரை மூன்று விபச்சார நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.