தமிழகத்தில் வாய் பேச முடியாத 11 வயது சிறுமியை மாதக்கணக்கில் சீரழித்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அயனாவரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், மாற்றுத்திறனாளி சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில், அந்தக் குடியிருப்பில் பணிபுரிந்த 17 பேரை பொலிசார் போக்ஸோ சட்டத்தின்கீழ், கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் கைதுசெய்தனர்.
இதில் ஒருவர் சிறையில் இறந்துவிட்ட நிலையில் இன்னொருவரை நீதிமன்றம் நேற்று விடுவித்தது.
இதையடுத்து மற்றம் 15 பேரும் குற்றவாளிகள் என இரு தினங்களுக்கு முன்னர் தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்நிலையில் குற்றவாளிகளுக்கான தண்டனை விபரம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒருவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், 9 பேருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதனிடையில் தீர்ப்பு நகல் கிடைத்தவுடன், இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம் என குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் மோகன்தாஸ் கூறியுள்ளார்.