மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் பஞ்சாயத்து தலைவர் தலைமையிலான குழு, பெண்ணை முழங்காலில் கயிற்றால் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவிலிருந்து 400 கி.மீ தூரத்தில் உள்ள தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்தின் கங்கராம்பூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள ஃபடா நகர் கிராமத்திலே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவி வீடியோவில், உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக உள்ள ஸ்மிருதிகோனா தாஸ் என்ற பெண்ணை அடித்து தரையில் சாய்த்த நபர்கள், அவரது முழங்கால்களில் கயிற்றைக் இழுத்துச் செல்கின்றனர்.
இச்செயலை திட்டி கண்டித்த ஸ்மிருதிகோனா தாஸின் மூத்த சகோதரி சோமா தாஸையும் அவர்கள் அடித்து கீழே தள்ளி இழுத்துச்சென்றுள்ளனர்.
சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட 24-25 வயதுடைய இரண்டு பெண்களும் கூறியதாவது, தங்கள் வீட்டின் முன் கட்டப்படும் சாலை 12 அடி அகலமாக இருக்கும் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது.
அதற்காக நிலத்தை விட்டுக்கொடுக்க அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் பஞ்சாயத்து சாலையை 24 அடிக்கு அகலப்படுத்த முடிவு செய்துள்ளது. இதனால், அதிக நிலத்தை தாங்கள் இழக்க நேரிடும் என்பதால் பெண்கள் ஆட்சோபனை தெரிவித்துள்ளனர்.
சாலை அகலப்படுத்தும் பணி தொடங்கியபோது பெண்கள் ஆட்சேபித்தபோது அடித்து இழுத்துச்செல்லப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Bengal woman teacher, sister tied, dragged. Trinamool leader led assault. https://t.co/dbcpRafIhs pic.twitter.com/ItKRkVRVaE
— NDTV (@ndtv) February 3, 2020
மூத்த சகோதரி சோமா தாஸ் முதலுதவிக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளார். ஸ்மிருதிகோனா தாஸ் சிகிச்சைக்கு பின்னர் திரும்பியுள்ளார்.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட கிராம பஞ்சாயத்து துணைத் தலைவர் அமல் சர்கார் மீது ஸ்மிருதிகோனா பொலிசில் புகார் அளித்துள்ளார்.
இச்சம்பவத்தை அடுத்து ஞாயிற்றுக்கிழமை, திரிணாமுல் மாவட்டத் தலைவர் அர்பிதா கோஷ், பஞ்சாயத்து தலைவர் அமல் சர்க்காரை பதிவியிலிருந்து நீக்கப்பட்டனர். இருப்பினும், அன்று மாலை வரை இந்த வழக்கில் எவரும் கைது செய்யப்படவில்லை.