பிக் பாஸ் புகழ் லொஸ்லியாவின் முதல் படம் குறித்த அறிவிப்பினை நேற்று வெளியிட்டிருந்தார்.
ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கும் ‘ஃபிரெண்ட்ஷிப்’ படத்தில் அவர் ஹீரோயினாக நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது.
இந்த இன்ப அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் வெளிவரும் முன்னரே லொஸ்லியா ஹீரோயினாக நடிக்கும் மற்றொரு படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதில் ‘நெடுஞ்சாலை’ உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்த ஆரி அர்ஜூனா நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் செந்தில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இதேவேளை, இன்று லொஸ்லியாவின் தந்தையின் பிறந்தநாள். இந்நிலையில் லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது அப்பாவின் புகைப்படத்தை பகிர்ந்து, ”பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பாச்சி.
கடந்த 23 வருடங்களாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னை பார்த்துக்கொண்டீர்கள்.
இந்த உலகத்துல எந்த பொண்ணும் இவ்ளோ தூரம் ஒரு டிவி சேனல்கு கூப்பிட்டு இந்த உலகமே கேவலமா கதைக்குற சிச்சுவேஷன்ல அவங்க அப்பாவ வச்சுருப்பாங்களானு தெரியல .
ஆனா நீங்க இன்னும் என்னை நேசிக்கிறீங்க. பொண்ணுங்களுக்கு தூய்மையான காதல் அவங்களுடைய அப்பாவிடம் தான் கிடைக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.