கடந்த சில தினங்களாக சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஷயம் பிக்பாஸ் தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டி விவாகரம் தான்.
நிச்சயம் செய்து விட்டு என்னை திருமணம்செய்துகொள்ளாமல் ஏமாற்றி விட்டார் தர்ஷன் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார் அவரது முன்னாள் காதலி சனம் ஷெட்டி.
இதனை மறுத்த தர்ஷன் தன்னை சனம் ஷெட்டி டார்ச்சர் செய்வதாகவும், பிக் பாஸ் ரம்யா திருமணத்திற்கு சென்ற போது, முன்னாள் காதலன் உடன் பார்ட்டியில் கலந்து கொண்டதாக கூறினார்.
மேலும் முன்னாள் காதலன் நடிகர் அஜய்யுடன் சனம் ஷெட்டி ஒரு இரவு ரூம் போட்டு தங்கியதால் அவரை நிச்சயம் திருமணம் செய்ய மாட்டேன் என்று தர்ஷன் உறுதியாக அறிவித்தார்.
இதனிடையே, தர்ஷனின் குற்றச்சாட்டை கேட்டு ஆத்திரத்தில் கொதித்தெழுந்த சனமின் முன்னாள் காதலர் அஜய், நைட் பார்ட்டியில் என்ன நடந்தது என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளதாவது, பிக்பாஸ் ரம்யா கல்யாணத்திற்கு நான் சென்றது உண்மை, அங்கு சனம் ஷெட்டியும் இருந்தார். அங்கு நாங்கள் இருவரும் பார்த்துக்கொண்டது உண்மை.
ஆனால் நாங்கள் ஒன்றாக இல்லை. ஏன் பேசிக்கொள்ள கூட இல்லை என்று ஓப்பனாக பதிலளித்துள்ளார். மேலும் நாங்கள் சனம் அங்கு வருவார் என்று நானும் எதிர்பார்க்கலை. அவங்களும் எதிர்பார்க்கலை. எதார்த்தமாக ஒரு வார்த்தை பேசிக்கொண்டோம்.
மொபைல் எண் ஷேர் செய்தோம். மற்றபடி இதுவரை நாங்கள் எதிலும் பேசிக்கொண்டது கூட இல்லை. என்னால இவங்களுக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது. எனக்கு சனம் ஷெட்டிக்கும் எந்தவித தொடர்பும் இப்போ இல்லை. தர்ஷனும், சனமும் சேர்ந்து இருக்க வேண்டும் என்னால தான் இந்த பிரச்சினை என்பதால் தான் நான் பேட்டியளிக்க வந்தேன் என கூறியுள்ளார்.