மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் ஒருவர் இரண்டு பெண் குழந்தைகளுடன் ரயில் முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்துள்ள கொடைக்கல் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன். இவர் பெங்களூரில் வேலை பார்த்து வருகின்றார்.
இவரது மனைவி நிர்மலா(23). திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிய நிலையில் இந்த தம்பதிகளுக்கு சஞ்சனா(3), ரித்திகா(1). இந்நிலையில் நிர்மலாவிற்கும், மாமியார் குடும்பத்தினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்றும் வாக்குவாதம் ஏற்பட்டதால் மன அழுத்தத்தில் இருந்த நிர்மலா இரண்டு குழந்தைகளையும் தவிக்கவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பின்பு கணவருக்கு தகவல் அளிக்கப்பட்டு, சடலத்தினை பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், மனைவியை அடக்கம் செய்துவிட்டு சோகத்துடனே இருந்து வந்துள்ளார் வெங்கடேசன்.
பின்பு தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு வாலாஜா ரயில்வே நிலையத்திற்கு வந்துள்ளார். அத்தருணத்தில் சென்னையிலிருந்து, கோவை நோக்கி சென்ற சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு வெங்கடேசன் தனது 2 மகள்களை இழுத்து கொண்டு பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.
இதில் 3 பேரின் உடலும் துண்டுதுண்டாக சிதறி தண்டவாளத்தில் விழுந்த நிலையில், தகவலறிந்த பொலிசார், சிதறிக்கிடந்த உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதுடன், விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.