Loading...
சோளம் ஒரு சிறந்த உணவு பொருள் ஆகும். சோளத்தில் அதிக ஊட்டச்சத்து நிறைந்துள்ளது.
இதில் ஆன்டி-ஆக்ஸிடென்ட் மற்றும் பைபர் உள்ளது. எடையைக் குறைக்கும் பணியில் சோளம் முக்கிய பங்கு வகிக்கிறது.
மஞ்சள் நிற சோளத்தில் ஒரு கப்பில் 392 மி.கி பொட்டாசியம் மற்றும் வெள்ளை சோளம் ஒரு கப்பில் 416 மி.கி பொட்டாசியம் உள்ளது.
Loading...
இது ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. எனினும் அதிக அளவு பொட்டாசியம் உள்ள உணவுகள் அனைவருக்கும் நல்லதல்ல.
குறிப்பாக வயதில் முதிர்ந்தவர்கள்,சிறுநீரக பிரச்சனை உடையவர்கள் எடுக்க கூடாது.மருத்துவரின் பரிந்துரையின்படி எடுக்கலாம்.
ஒரு கப் வேகவைத்த சோளத்தில் இவ்வளவு நன்மைகளா?
- மற்ற காய்கறிகளை போல சோளமும் செல்கள் சேதத்தை எதிர்த்து போராடும்.
- இதய நோய்,புற்றுநோய் மற்றும் பிற நோய்களில் இருந்தும் பாதுகாக்க கூடியது. கோதுமை,அரிசியை விட சோளத்தில் ஆன்டி-ஆக்ஸிடென்ட் அதிகம்.
- சோளத்தில் கரோடெனாய்டுகள் ,வைட்டமின்-சி மற்றும் வைட்டமின்-இ உள்ளது.கரோடெனாய்டுகள்இருப்பதால் கண்களுக்கு மிகவும் சிறந்தது.
- ஒரு கப் வேகவைத்த சோளத்தில் 4 கிராம் நார்சத்து உள்ளது.இதனால் மலச்சிக்கல் ,இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து விடுபட முடியும்.14% வைட்டமின்-சி யும்,12% மங்கனீசும் உள்ளது.
- அதிக பழங்கள் மற்றும் காய் சாப்பிடுபவர்களின் எடையை விட அதிக நார்சத்து நிறைந்த சோள உணவு சாப்பிடுபவர்களின் எடை குறைந்துள்ளதாகவும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Loading...