சுதந்திரதின நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிகழ்த்திய உரை மிகவும் சிறப்பானதாக இருந்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உரையில் குறிப்பிட்ட விடயங்களை ஜனாதிபதி நடைமுறைப்படுத்த வேண்டும் என்றம் அவர் கூறியுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில்அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையில், 72வது சுதந்திரதின நிகழ்வு இன்று சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றிருந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய ஜனாதிபதி,
“இலங்கையின் பிரஜைகள் அனைவருக்கும் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்கான உரிமை இருக்கிறது.
அதேபோல அவர்களுக்கு இருக்கக்கூடிய சுதந்திரமாக சிந்தித்தல், தனிப்பட்ட அபிப்பிராயங்களைக் கொண்டிருப்பதற்கான சுதந்திரம், கருத்துச்சுதந்திரம் ஆகிய உரிமைகளை உறுதிசெய்வதற்கு நாம் முனைப்புடன் செயலாற்றுவோம்” என குறிப்பிட்டார்.
இந்நிலையிலேயே, மங்கள சமரவீர இவ்வாறு கூறியுள்ளார்.
President’s speech today excellent; now he must walk the talk. A strong leader is a person who can implement difficult decisions within a democratic framework. Our journey since ‘48 has been full of well meaning leaders making good speeches. Now is the time to act !
— Mangala Samaraweera (@MangalaLK) February 4, 2020
இலங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி ஆற்றிய உரையானது மிகவும் விசேடமான ஒன்றாகும். தூர நோக்குள்ள மிகவும் பலம் பொருந்திய தலைவர் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
1948ம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பயணம் சிறந்த உரைகளை நிகழ்த்திய நன்நோக்கம் கொண்ட தலைவர்களைக் கொண்டிருக்கிறது. ஆனால் இது செயற்பட வேண்டிய தருணமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.