கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவை பிணையில் விடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக கொலை குற்றம் புரிந்ததாக அவமீது குற்றம் சுமத்தப்பட்டு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
அதன் பின்னர் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று ரூபா 250,000 பெறுமதியான காசு பிணை மற்றும் தலா 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையில் விடுதலை அவர் செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு வெளிநாட்டு பயணத் தடையை விதித்த நீதிபதி, ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு ஆஜராகுமாறும் உத்தரவிட்ட்டுள்ளாமை குறிப்பிடத்தக்கது.