நடிகர்களான விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் மகள்தான் வனிதா விஜயகுமார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர்.
வனிதா தமிழில் முதன்முதலாக விஜய்க்கு ஜோடியாக ‘சந்திரலேகா’ என்ற படத்தில் தான் அறிமுகமானார். இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி அதிகளவு பிரபலமாவதற்கு முக்கிய காரணம் வனிதா. மேலும்,பிக் பாஸ் வீட்டிற்கு வந்து கொஞ்ச நாட்களிலேயே வனிதாவினால் பயங்கர பிரச்சனைகள், சர்ச்சைகள் தோன்றினார்.
இதனால், மக்கள் வனிதாவை வெறுக்கவும் ஆரம்பித்தார்கள். வனிதா குறித்து பல விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார்கள். உண்மையில் தப்போ சரியோ தனக்கு என்ன தோணுதோ வனிதா விஜயகுமார் கேமரா முன் தைரியமாக பேசுவார். தர்ஷன் – சனம் ஷெட்டி பஞ்சாயத்து உலகறிந்த விஷயம். இது குறித்து வனிதா சமீபத்தில் அளித்த பேட்டியில்,
“தர்ஷன் என் தம்பி மாதிரி, கழட்டிவிடுறதுக்கு Silly Reasons சொல்லிட்டு இருக்கான். அந்த பொண்ணு அந்த Night தப்பு பண்ணிருந்தாலும் இவன் கேமரா முன்னாடி அந்த பொண்ண தப்பு சொல்லி இருக்கக்கூடாது. ஏதோ Possessiveness – னு சொல்றான், என்கிட்டலாம் சொல்லி இருந்தா செருப்பால அடிச்சிருப்பன்” என்று அவருக்கே உரிய பாணியில் கார சாரமாக பேசியுள்ளார்.