பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரோனின் மெய்ப்பாதுகாவலர் குண்டுகள் நிரப்பப்பட்ட தனது துப்பாக்கியை பயணிகள் விமானத்தின் கழிவறையில் விட்டுச் சென்ற சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியுயோர்க்கிலிருந்து ஹீத்ரோவுக்கு பெப்ரவரி 03 ஆம் திகதி பறப்பை மேற்கொண்டிருந்த விமானத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விமான கழிவறைக்கு சென்ற பயணி ஒருவர் அங்கு குண்டுகள் நிரப்பப்பட்ட துப்பாக்கி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த நிலையில் விமான பணியாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.எனினும் விமானி ஆயுதங்களுடன் படை அதிகாரிகள் பயணிப்பதை அறிந்ததுடன் அவர்களை தொடர்ந்து பயணிக்க அனுமதித்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பொலிஸ் பேச்சாளர்,இந்த சம்பவம் தொடர்பில் நாம் அலட்சியமாக இருக்க முடியாது.துப்பாக்கியை விட்டு வந்த பாதுகாப்பு அதிகாரி அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம் என தெரிவித்தார்.