மேற்கு சுவிட்சர்லாந்தில் குடியிருக்கும் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் கிறிஸ்தவக் கோயில் சட்ட நிபுணரும் பாதிரியாருமான Paul Frochaux மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
குறித்த பல்கலைக்கழக விரிவுரையாளர் வெளியிட்ட தகவலில், அந்த நேரத்தில் பாதிரியார் தன்னை தவறாக பயன்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த முழு விவகாரமும் 1998 ஆம் ஆண்டு ஒரு வார இறுதியில் Valais-ல் அமைந்துள்ள ஒரு இல்லத்தில் வைத்து நடந்ததாக அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
சம்பவம் நடக்கும்போது தமக்கு அப்போது 17 வயது இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது 46 வயதான பாதிரியார் Paul Frochaux தமக்கு உதட்டில் முத்தம் வைத்ததாகவும், அதன் பின்னர் படுக்கைக்கு அழைத்து சென்று இயற்கைக்கு மாறான செயலில் ஈடுபட கட்டாயப்படுத்தினார் எனவும் தற்போது 39 வயதான அந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தால் தாம் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும், அது அவமானம் மற்றும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட உணர்வு ஆகியவற்றின் கலவையாக தமக்கு இருந்தது எனவும் அவர் மனம் திறந்துள்ளார்.
தமக்கு நேர்ந்த துயரத்தை கடந்த 2000-ல் தமது தாயாருக்கு வெளிப்படுத்தியதாகவும், அந்த அதிர்ச்சியில் இருந்து மீள அவருக்கு நாட்கள் ஆனது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் தமது தாயார் அனுப்பிய கடிதத்திற்கு பாதிரியார் Paul Frochaux பதில் அளித்ததாகவும், நடந்த தவறுக்கு அவர் மன்னிப்பு கோரியதாகவும் விரிவுரையாளர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் லாசன்னே, ஜெனீவா மற்றும் ஃப்ரீபர்க் ஆகிய பகுதிகளின் கத்தோலிக்க ஆயர்களுக்கு தெரிய வந்த பின்னரும் நீண்ட 8 ஆண்டுகள் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை எனவும்,
2019 இறுதியில் பாதிரியார் Paul Frochaux-கு எதிரான ஆவணங்களை ஆயர்கள் குழு பொலிசாருக்கு அளித்ததாகவும் கூறப்படுகிறது.
தற்போது பாதிரியார் Paul Frochaux திருச்சபையில் இருந்து இறுதியாக செவ்வாய்க்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.