Loading...
இன்று அதிகாலை கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த இ.போ.ச பஸ்சும் தனியார் பஸ்சும் மோதி விபத்துள்ளாகியுள்ளது.
இ.போ.ச பேருந்த்து தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 99ம் கட்டைப் பகுதியில் பயணித்த பயணிகளை இறக்கி கொண்டிருந்த போது பின்னே வந்த தனியார் பஸ், இ.போ.ச வை மோதியுள்ளது.
இவ்விபத்தில் தனியார் பஸ்ஸின் உதவியாளர் உயிரிழந்துள்ளதுடன், சாரதி படுகாயமடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
Loading...
அத்துடன் விபத்தில் காயமடைந்தவர்களை கந்தளாய் மற்றும் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...