நடிகர் விஜயிடம் வருமான வரி துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், அஜித் ஆகியோரின் வரிசையில் அதிக ரசிகர்களை கொண்டவர் தான் நடிகர் விஜய், இவர் தன்னுடைய பட விழாவின் போது அரசியலைப் பற்றி பேசுவார்.
அது பெரிய அளவில் டிரண்டாகிவிடும். தற்போது இவர் மாஸ்டர் என்ற படத்தில் நடித்து வரும் நிலையில், நேற்று சூட்டிங் நடந்த இடத்திற்கே சென்ற வருமான வரி துறையினர் விசாரணை நடத்தினர்.
அதன் பின் அவருடைய வீட்டிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சுமார் 18 மணி நேர விசாரணைக்கு பின் விஜய் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதில், பிகில் படத்திற்கு பெற்ற சம்பளம் ரூபாய் 30 கோடி பெற்றதாகவும், அது தவிர வேறு சில தகவல்களையும் வருமான வரித்துறையிடம் விஜய் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
அதே சமயம் மனைவி சங்கீதாவிடமும் அதிகாரிகள் வாக்குமூலம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.