Loading...
தமிழகத்தில் வாழ்க்கையில் விரக்தியடைந்த இலங்கை தமிழர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையை சேர்ந்தவர் அந்தோணி (58). இவர் தமிழகத்தின் கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கி கூலி வேலை செய்துவந்தார்.
அந்தோணிக்கு மது அருந்தும் பழக்கும் உள்ளது. இதன் காரணமாக அவரது மகன் அந்தோணியை அடிக்கடி கண்டித்து வந்தார்.
Loading...
இதனால் மனவேதனையில் இருந்த அந்தோணி வாழ்க்கையில் விரக்தியடைந்தார்.
சம்பவத்தன்று முகாமில் உள்ள வீட்டில் அந்தோணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த பொலிசார் அந்தோணியின் சடலத்தை கைப்பற்றிவிட்டு இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading...