பிகில் பட விவகாரத்தில் நடிகர் விஜய் வரிஏய்ப்பு செய்தது உறுதிசெய்யப்பட்டால் அவர் சிறைக்கு செல்ல நேரிடும் என்று கூறப்படுவதோடு அவர் ஏற்கனவே வரிஏய்ப்பு செய்து அபராதம் செலுத்தியதும் தெரியவந்துள்ளது.
நடிகர் விஜய் நடித்து கடந்தாண்டு வெளியான பிகில் திரைப்படம் 300 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது.
இந்த சூழலில் தான் நடிகர் விஜய்யின் பண்ணை வீடு, அலுவலகம் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இதோடு பிகில் தயாரிப்பாளர் அர்ச்சனாவின் வீடு, அலுவலகத்திலும் பைனான்சியர் அன்பு செழியனுடய இடங்களிலும் சோதனை நடந்தது.
மூவரும் முறையாக வரி செலுத்தவில்லை என்பதும், பணபரிவர்த்தனையில் கருப்பு பணம் இருந்ததாகவும் வருமானவரித்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை நடந்து வருவதாகக் கூறுகின்றனர் அதிகாரிகள்.
பிகில் திரைப்படத்தில் நடித்ததிற்கு நடிகர் விஜய் சுமார் 50 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது.
அன்புச்செழியன் அலுவலகம், ஏ.ஜி.எஸ் அலுவலகம் ஆகிய இடங்களில் நடந்த சோதனையில், பிகில் படத்திற்கு விஜய் சம்பளம் பெற்றது தொடர்பான முக்கிய ஆவணம் சிக்கியது.
Sources: Money recovered from the financer of Tamil actor Vijay during Income Tax Department raids. https://t.co/IBIl5mouYl pic.twitter.com/tbOIX76X3I
— ANI (@ANI) February 6, 2020
நேற்றைய சோதனையில் ags சினிமாஸ், அன்புச்செழியன் தொடர்புடைய இடங்களிலிருந்து கணக்கில்வராத ரூ.65 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டில் நடிகர் விஜய் வீடுகளில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். அக்டோபர் ஒன்றாம் தேதி வெளியான புலி படத்தில் நடித்ததற்காக பெற்ற சம்பளத்தில் 5 கோடி ரூபாயை வருமானவரி கணக்கில் விஜய் காட்டவில்லை என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, வருமானவரித் துறையினர் நோட்டீஸ் அனுப்பினர். வரிஏய்ப்பு செய்த தொகைக்கான வரி, அதற்கான வட்டி ஆகியவற்றை சேர்த்து செலுத்துவதாக விஜய் ஒப்புக் கொண்டார். இதன்படி, வட்டியுடன் சேர்த்து செலுத்தினார்.
அதேநேரம், வட்டியுடன் சேர்த்து வரி செலுத்திய ஒருவர், மீண்டும் வரி ஏய்ப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, பிகில் பட விவகாரத்தில் நடிகர் விஜய் வரிஏய்ப்பு செய்தது உறுதிசெய்யப்பட்டால் அவர் கைதாகலாம் என கூறப்படுகிறது.