கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு ஓய்வில்லாமல் சிகிச்சையளித்து வந்த 28 வயதான மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 560-ஐ தாண்டியுள்ளது.
உயிர்கொல்லி வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
முக்கியமாக பல மருத்துவர்கள் தங்களின் உடல்நிலை பற்றி கூட கவலைப்படாமல் உணவு, தூக்கத்தை விட்டு மருத்துவ பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் 28 வயதான மருத்துவர் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்தார்.
A 28-year-old doctor, serving in the coronavirus frontline in Hunan Province, died after suffering cardiac arrest Monday midnight. He had been working for 10 days without proper rest and overwork is believed to be the primary cause of his sudden demise. Rest in peace, hero! pic.twitter.com/RheyNM0UtK
— Global Times (@globaltimesnews) February 6, 2020
கடந்த பத்து நாட்களாக சரியான ஓய்வின்றி அதிக பணியில் அந்த மருத்துவர் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் நள்ளிரவில் திடீரென கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார்.
ஓய்வின்றி பணியில் ஈடுபட்டதால் அவரின் உயிர் பிரிந்தது தெரியவந்துள்ளது.
நாட்டின் நிஜ ஹீரோவான அந்த மருத்துவருக்கு பலரும் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.