நடிகர் விஜய் வீட்டில் சோதனையில் ஈடுபட்ட வருமானவரித் துறை அதிகாரிகள் இரண்டு கிரிக்கெட் பேட்-களை எடுத்துச்சென்றதாக பரவும் தகவல் குறித்த உண்மை பின்னணி தெரியவந்துள்ளது.
பணையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் 35 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த வருவமானவரித் துறை சோதனை நேற்று இரவு முடிவடைந்தது.
நடிகர் விஜயிடம் நடத்திய விசாரணை முடிந்தது. ஆனால், ரொக்கமோ, வரி ஏய்ப்போ கண்டுபிடிக்க முடியவில்லை. உரிய ஆவணங்கள் இருந்தன என சோதனைக்கு பின் வருமானவரித் துறை அதிகாரி தகவல் அளித்தார்.
இந்நிலையில், விஜய் வீட்டிலிருந்து இரண்டு கிரிக்கெட் பேட்-களை அதிகாரிகள் எடுத்துச்சென்றதாக புகைப்படத்துடன் சமூகவலைதளங்களில் தகவல் பரவியது.
அந்த புகைப்படத்தில் காரின் இருக்கையில் இரண்டு கிரிக்கெட் பேட்-கள் இருந்ததை காட்டியது. இதனையடுத்து, அதிகாரிகள் பேட்டை ஏன் எடுத்துச்சென்றார்கள் என நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்ப தொடங்கினர்.
இந்நிலையில், குறித்த கிரிக்கெட் பேட்டுகள் அந்த கார் ஓட்டுநருடையது என தெரியவந்துள்ளது. அது தவறாக விஜய் வீட்டிலிருந்து எடுத்துச்செல்லப்பட்டதாக தகவல் பரவியுள்ளது.