இருமல் என்பது நுரையீரல், பெரிய காற்றுக்குழாய்கள் மற்றும் தொண்டை ஆகியவற்றிலிருந்து சளியை அல்லது உறுத்தும் துணிக்கைகளை அகற்றுவதற்காக உடலினால் ஏற்படுத்தப்படும் சத்தமும் அசைவுமாகும்.
பொதுவாக இருமல் குளிர்காலத்தில் அனைவரையும் பாடாய் படுத்தி விடுகின்றது.
இதற்காக அடிக்கடி பார்மசிகளில் விற்கு கண்ட கண்ட மருந்து வாங்கி உபயோகிப்பதை தவிர்த்து விட்டு சில இயற்கையாக கிடைக்கும் பொருட்களை கொண்டு கஷாயம் செய்து பருகி வந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
அந்தவகையில் எப்படிப்பட்ட இருமலையும் குணப்படுத்தும் கஷாயம் ஒன்றை பற்றி இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- வெந்தயக் கீரை – ஒரு கையளவு
- உலர் திராட்சை – 10
- சீரகம் – அரை ஸ்பூன்
செய்முறை
வெந்தயக் கீரையை சுத்தப்படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 500 மி.லி தண்ணீர் ஊற்றி அதில் ஆய்ந்து வைத்துள்ள வெந்தயக் கீரை, உலர் திராட்சை மற்றும் சீரகம் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
நீரில் வெந்தயக் கீரை நன்கு கொதித்து அந்த நீரை 150 மி.லி அளவாக சுண்டவைத்து இறக்கி வடிகட்டி வைத்துக் கொண்டு குடிக்கவும்.
நாட்பட்ட இருமல், தொடர் இருமல், வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல் உள்ளவர்கள் இந்தக் கசாயத்தை தயார் செய்து வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் எப்படிப்பட்ட இருமலும் குணமாகும்.