உலகக் கோப்பை வென்ற இந்திய விக்கெட் கீப்பர்-துடுப்பாட்டகாரர் எம்.எஸ்.டோனி, பானி பூரி கடையில் வேலை செய்யும் இணையத்தில் வைரலாகியுள்ளது.
2019 உலகக் கோப்பை முதல் கிரிக்கெட்டில் இருந்து விலகியிருக்கும் டோனி, தனது நேரத்தின் பெரும்பகுதியை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் செலவிட்டு வருகிறார்.
டோனி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக வதந்திகள் பரவி வரும் நிலையில், அவருடைய வீடியோ ஒன்று இணையத்தில் வெளிவந்துள்ளது.
அதில் அவர் பானிபூரி கடையில் நின்றுக்கொண்டு, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆர்.பி.சிங் மற்றும் முன்னாள் இந்திய சகா வீரர் பியூஷ் சாவ்லா ஆகியோருக்கு சேவை செய்வதைக் காணலாம்.
Straight outta Maldives, our rockstar is seen making a couple of pani puris!??
Our favorite chat just became even more delectable! ??#MahiInMaldives #Dhoni @msdhoni pic.twitter.com/NFjGcuMT1h
— MS Dhoni Fans Official (@msdfansofficial) February 4, 2020
குறித்த வீடியோ மலத்தீவில் எடுக்கப்பட்டதாக தெரியவருகிறது. சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள குறித்த வீடியோ டோனி ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.