எதிர்கால பாலியல் கல்வி நூல்களுக்கான கட்டமைப்பை தயாரிப்பதென்று நாடாளுமன்றத்தின் கல்வி மற்றும் மனித வளங்கள் அபிவிருத்தி கண்காணிப்புக்குழு தீர்மானித்துள்ளது.
இதற்காக நிபுணர்கள் அடங்கிய குழுவினர் நாடாளுமன்ற கட்டடத்தில் பெப்ரவரி 17ம் திகதியன்று கூடவுள்ளனர்.
ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கான ஹெத அபே பொத்த என்ற பாலியல் கல்வி நூல் தொடர்பில் சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஹெத அபே பொத்த நூல் தொடர்பில் முழு அறிக்கையை ஒரு மாதத்துக்குள் தருமாறு ஏற்கனவே இந்த குழு கல்வியமைச்சை கேட்டிருந்தது.
இந்தநிலையில் வரைபு நிறைவடைந்ததும் பாலியல் கல்வி தொடர்பான தேசிய கொள்கை வகுக்கப்படும் என்று கல்வி தொடர்பான நாடாளுமன்ற கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் பாலியல் கல்வி தொடர்பான கட்டமைப்பு தயாரிக்கப்படுமானால் அது 12ம் வகுப்பு மாணவர்களுக்கான இனப்பெருக்க சுகாதார நூலை வடிவமைக்க உதவியாக இருக்கும் என்று கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.