பார்வதி தேவியை வழிபடத்தக்க விரத நாள்கள் மூன்று. அவை வருமாறு:
வெள்ளிக்கிழமை விரதம்: சித்திரை மாதம், வளர்பிறை, முதல் வெள்ளிக்கிழமையன்று தொடங்கி, வாரந்தோறும் பார்வதி தேவியரைக் குறித்து மேற்கொள்ளும் விரதம் இது. விரதத்தின்போது பகலில் ஒரு பொழுது உண்ணலாம்.
ஆடிப்பூர வழிபாடு :
ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் போது சுக்கிரனின் நட்சத்திரமான பூரம் நட்சத்திரம் வரும் நாள் Ôஆடிப்பூரம்Õ என்று அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் கோவில்களில் உற்சவம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த பூரத்திற்கு சில நாட்களுக்கு முன்பு பச்சைப் பயிறைத் தண்ணீரில் நனைத்து முளைவிட வைப்பார்கள்.
ஆடிப்பூரம் தினத்தன்று அது நன்றாக முளைவிட்டிருக்கும். அதை பெண்கள் தலையில் சுமந்து கோவிலுக்குச் சென்று அம்பிகைக்கு நைவேத்தியமாக வைப்பார்கள். பின்னர் அதை அவர்கள் பிரசாதமாகச் சாப்பிடுவார்கள். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் இவ்வாறு முளைப்பாரி எடுத்து நைவேத்தியம் செய்து வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
துளசி வழிபாடு :
துளசி இருக்கும் இடத்தில் லட்சுமி வசிப்பாள். விஷ்ணு அருள் கிடைக்கும். வீட்டின் மேற்குப் பகுதியில் சூரிய உதயத்தைப் பார்த்த நிலையில் துளசி செடியை தொட்டியில் வைத்து வழிபட வேண்டும். துளசி மாடத்திற்கு தினமும் நீர் ஊற்றி, கோலமிட்டு வழிபட்டு வந்தால் நல்லது. துளசி மாலையை விஷ்ணுவுக்கும் அணிவித்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி அல்லது கார்த்திகை மாதம் வளர்பிறை திவாதசி அன்று பிருந்தாவன துளசி பூஜை செய்ய வேண்டும். புஷ்பங்களால் அர்ச்சிப்பது விசேஷம்.
பாவை நோன்பு :
ஸ்ரீஆண்டாள் பாடி அருளிய திருப்பாவையும் ஸ்ரீமாணிக்கவாசக சுவாமிகள் பாடி அருளிய திருவெம்பாவையும் மார்கழி நோன்பை அடிப்படையாகக் கொண்டவை ஆகும்.
‘மாதங்களில் நான் மார்கழி ஆவேன்’ எனக் கண்ணபிரான் கீதையில் அருளினார். வைணவர்களும் சைவர்களும் ஒருங்கே கொண்டாடும் மாதம் இது. வைகுண்ட ஏகாதசியும் ஆருத்ரா தரிசனமும் இம்மாதத்தில் தான் வருகின்றன. இம்மாதத்தில் அதிகாலையில் செய்யக் கூடிய பூஜையானது, ஒரு வருடத்தில் பூஜை செய்த பலனைத் தரும்.