இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுக்கு அருகில் பாரிய நில அதிர்வொன்று இன்று காலை ஏற்பட்டுள்ளது.
6.5 ரிக்டர் அளிவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதென இந்தோனேஷியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
சுமத்ராவின் அச்சே மாநிலத்திற்கு அருகிலேயே இந்த நில அதிர்வு உணர்ப்பட்டுள்ளது.
நில அதிர்வின் காரணமாக 24 பேர் உயிரிழந்துள்ளதாக பிபிசி தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்கு பாதிப்பேற்பட்டுள்ளன. எனினும் இந்த நில அதிர்வு காரணமாக சுனாமி ஏற்படும் பாதிப்பு இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நில அதிர்வினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கடந்த 2004ம் ஆண்டில் இதே பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் காரணமாக ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.